ajith sad [File Image]
அஜித் ரசிகர்களுக்கு கவலை இப்போது என்னவென்றால் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் தான் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்காமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையை கொடுத்துள்ளது. மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாகும் போதெல்லாம் அவர்கள் லைக்கா நிறுவனத்திடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டுக்கொண்டே வருகிறார்கள். மேலும், அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது.
ஆனால், படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2-ஆம் தேதி துபாயில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் கூறப்பட்ட காரணத்தால் அதனை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிச் செல்ல வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம்.
அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி விடாமுயற்சி படத்தை விறு விறுவென எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக படம் வெளியாகிவிடும். இதற்கிடையில், அப்டேட்டிற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இனிமேல் தொடர்ச்சியாக அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…