Pichaikkaran 2 [Image source : youtube]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பிச்சைக்காரன்-2 படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த படம்மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தனது ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தின் கதைதான் ‘பிச்சைக்காரன் 2’ என ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடு கோரியிருந்தார்.
தற்போது, படத்திற்கு தடை மற்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய ஆய்வுக்கூடம் படத்தின் தயாரிப்பாளர் ராஜகணபதி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் ராஜகணபதி தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து, பிச்சைக்காரன்-2 படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது, ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…