பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் காலமானார். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Kota Srinivasa Rao

சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோட்டா சீனிவாச ராவ் (1942-2025) ஒரு பிரபல இந்திய நடிகர், முக்கியமாக தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ‘பெருமாள் பிச்சை’, ‘சனியன் சகடை’ கேரக்டரை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தனக்கென தனித்துவமான சிரிப்பு மேனரிசம் கொண்ட அவர், சந்தானத்துடன் காமெடியிலும் கலக்கி இருக்கிறார்.

அவரது நடிப்பு பல்துறைத்திறனுக்கும், குறிப்பாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களுக்கும் பெயர் பெற்றவர்.  1978-ல் ‘பிரணம் கரீது’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் ‘சாமி’ (2003), ‘திருப்பாச்சி’, ‘கோ’, ‘சகுனி’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் புகழ்பெற்றார். 1999-2004 வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 2015-ல் அவரது திரையுலக பங்களிப்பிற்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

கோட்டா ஸ்ரீனிவாச ராவ்

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 10 ஜூலை 1942-ல் ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தார். ஸ்டேட் பேங்கில் வேலை பார்த்து வந்த அவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதுவே அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது. 1978-ல் வெளியான ‘பிரணம் கரீடு’ என்ற தெலுங்கு படத்தில் திரையில் அறிமுகமாகினார். 1966-ல் ருக்மிணி என்பவரை திருமணம் செய்து கொண்டவருக்கு 2 மகள்களும் ஒரு மகன் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்