jailer [file image]
சூப்பர் ஸ்டார் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டைட்டில் மீது சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, மலையாளத்தில் சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தயன் ஸ்ரீநிவாசன் நடிப்பில் ஜெயிலர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்காக ஜெயிலர் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில், டைட்டில் சர்ச்சையால் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகிறது.
இது குறித்து, இயக்குனர் சக்கீர் மடத்தில் முதலில் நாங்கள் ‘ஜெயிலர்’ என்ற பெயரை பதிவு செய்ததாக ரஜினி நடிக்கும் ஜெயிலர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், நாங்கள் 21 ஆகஸ்ட் 2021 அன்று ‘ஜெயிலர்’ என்ற பெயரை கேரள ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளோம். ஆனால், 2022-ல் தான் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எங்களது ‘ஜெயிலர்’ படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட நினைத்தோம். ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். குறைந்த பட்சம் கேரளாவிலாவது எங்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அந்த நோட்டீஸில் கேட்டு கொண்டனர். தற்போது, இந்த சிக்கல்களை ஜெயிலர் படக்குழு எவ்வாறு கையாள போக போகிறது என தெரியவில்லை, பொருத்திருந்து பார்க்கலாம்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…