ராமர் கோயில் திறப்பு விழா – பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு!

vishal - pmmodi

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் பால ராமர் சிலையில் கண்களை மறைக்கப்பட்ட துணி அகற்றப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று யாகங்களில் கலந்து கொண்டார்.

இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதத்தை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தத்துடன் இன்று ராமர் கோயிலுக்கு வருகை தந்து விழாவில் பங்கேற்றுள்ளார். 5 வயதுடைய பால ராமர் சிலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமருக்கு கண் கவரும் வகையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.

இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

அயோத்தியில் உள்ள தங்க மாளிகை பற்றி தெரியுமா.? ராமர் – சீதாவுக்கு கிடைத்த திருமண பரிசு.!

ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி, மற்றொரு சிறந்த சாதனைக்கு வாழ்த்துகள், ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் பல ஆண்டுகளாக மற்றும் தலைமுறைகளாக நினைவுகூரப்படும் மற்றும் இந்த அற்புதமான தருணத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவார்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai