vishal - pmmodi [File Image]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் பால ராமர் சிலையில் கண்களை மறைக்கப்பட்ட துணி அகற்றப்பட்டது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று யாகங்களில் கலந்து கொண்டார்.
இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதத்தை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தத்துடன் இன்று ராமர் கோயிலுக்கு வருகை தந்து விழாவில் பங்கேற்றுள்ளார். 5 வயதுடைய பால ராமர் சிலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமருக்கு கண் கவரும் வகையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்.
இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
அயோத்தியில் உள்ள தங்க மாளிகை பற்றி தெரியுமா.? ராமர் – சீதாவுக்கு கிடைத்த திருமண பரிசு.!
ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், அன்புக்குரிய மாண்புமிகு பிரதமர் மோடி, மற்றொரு சிறந்த சாதனைக்கு வாழ்த்துகள், ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் பல ஆண்டுகளாக மற்றும் தலைமுறைகளாக நினைவுகூரப்படும் மற்றும் இந்த அற்புதமான தருணத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவார்கள், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…