rashmika mandanna Vijay Deverakonda [File Image]
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் இருக்கிறது. இருப்பினும் தாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என விஜய் தேவரகொண்டாவும் சரி, ராஷ்மிகா மந்தனாவும் சரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தாலும் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒரே இடங்களுக்கு சுற்றுலா செல்வது போல இவர்களுடைய புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இவர்கள் காதலிப்பது உறுதி என்ற தகவலை வைரலாக்க காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக மாலத்தீவில் விஜய் தேவரகொண்டா இருந்த அதே இடத்தில் ராஷ்மிகா மந்தனா இருந்த புகைப்படமும் கூட மிகவும் வைரலானது.
நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைதள பக்கங்களில் ஒருவருடைய கையை பிடித்துக்கொண்ட வரும் புகைப்படத்தை பகிர்ந்து ” நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது- விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்தும் இருந்தார்.
இதனை பார்த்த பலரும் அந்த புகைப்படத்தில் இருப்பது ராஷ்மிகா மந்தனா தான் எனவும் கூறி வந்தார்கள். இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் மிகவும் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார்களாம்.
இவர்கள் இருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சியதார்தம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மையில் இவர்கள் இருவரும் நிச்சியதார்தம் செய்துகொள்ள போகிறார்களா? அல்லது இது வெறும் வதந்திதானா என்பது பற்றி இவர்களே அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…