ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..
மயிலாடுதுறையில் நடந்த திமுக நிகழ்வில் எம்.பி ஆ.ராசா பேசிக்கொண்டு இருக்கையில், மேடை அருகே இருந்த மின் விளக்குகள் விழுந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது நிகழ்வில் ஆ. ராசா பேசிக்கொண்டிருந்தார்.
ஆ.ராசா பேசிகொண்டு இருக்கையில், அப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது அவர் பேசும் மேடை முன்பு வைக்கப்பட்டு இருந்த மின் விளக்குகள் காற்றின் வேகம் காரணமாக அப்படியே சரிந்து ஆ.ராசா பேசிக் கொண்டிருந்த மேடை மீது விழுந்தது. சரிந்து விழப்போவதை முன்கூட்டியே கவனித்த ஆ.ராசா சட்டென அங்கிருந்து விலகினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆ.ராசா, மின் விளக்குகள் விழப்போவதை அறிந்து நகர்ந்தால் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. மேடையில் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதனை அடுத்து ஆ.ராசா விழா நடைபெறும் இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
மயிலாடுதுறையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தபோது பலத்த காற்றால் மேடையில் சரிந்து விழுந்த மின்விளக்கு. pic.twitter.com/ZJM2WIDaPX
— Barakath Ali (@sambarakathali) May 4, 2025