வெறித்தனம்.! G.O.A.T படத்தில் நம்ம கேப்டன் காட்சி! பார்த்துவிட்டு பிரேமலதா கூறிய வார்த்தை?

Published by
பால முருகன்

சென்னை : கோட் படத்தில் விஜயகாந்தை AI மூலம் உருவாக்கிய காட்சியை பார்த்துவிட்டு பிரேமலதா நன்றாக இருப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறந்த கேப்டன் விஜயகாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் AI-மூலம் உருவாக்கம் செய்யப்பட்டு கேமியோ கதாபாத்திரத்தில் வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடந்த சில நாட்களுக்கு முன்பு  பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது உறுதிப்படுத்தி இருந்தார்.

வெங்கட் பிரபு சிறிய வயதில் இருந்தே தனக்கு தெரியும் அதைப்போல விஜய்யும் எங்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் எனவே இவர்கள் கேட்டால் கண்டிப்பாக என்னால் மறுப்பு தெரிவிக்க முடியாது எனவே, நான் ஒப்புக்கொண்டேன் என்று கூறியிருந்தார். எனவே, விஜயகாந்த் AI மூலம் கோட் படத்தில் வருவார் என்ற தகவலை கேட்டவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்த் வரும் அந்த காட்சியை கச்சிதமாக படக்குழு AI தொழில்நுட்பம் மூலம் தயார் செய்துவிட்டதாம். தயார் செய்த பிறகு பிரேமலதா விஜயகாந்திற்கு கால் செய்து காட்சி ரெடி ஆகிவிட்டது என்று கூறி அந்த காட்சியை போட்டு காமித்தாராம். அந்த காட்சியை பார்த்துவிட்டு ஆச்சரியம் அடைந்துவிட்டாராம்.

ஏனென்றால், அந்த காட்சியை பார்க்கும்போது அப்படியே விஜயகாந்தே வந்து நடித்து கொடுத்த அளவிற்கு இருக்கிறதாம். அந்த காட்சியை பார்த்துவிட்டு ரொம்பவே அருமையாக இருப்பதாகவும் வெங்கட் பிரபுவிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். படத்தில் விஜயகாந்த் முக்கியமான ஒரு காட்சியில் தான் விஜயகாந்த் வருகிறாராம். அந்த காட்சி பார்க்கும்போது எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு இருக்கும் எனவும், படத்தில் அவருடைய காட்சி 2.5 நிமிடம் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

6 minutes ago

அகமதாபாத் விமான விபத்து : ‘இழப்பீடு இல்லை’ என மிரட்டுவதாக எழுந்த புகார்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…

36 minutes ago

பாமக சட்டமன்றக்குழு கொறடா அருளை நீக்குங்க… மனு அளித்த பாமக எம்எல்ஏக்கள்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…

1 hour ago

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

2 hours ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

3 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

4 hours ago