Meera - VijayAntony - LEO [File Image]
விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, லியோ படத்தின் போஸ்டர் இன்று வெளியாக இருந்த நிலையில், நாளை வெளியாகும் என குறிப்பிட்டு படக்குழு ஒத்திவைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க இந்திய சினிமாவை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது.
அதன்படி, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லியோ படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று முன் தினம் முதல் அந்தந்த திரையுலகின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட சினிமா போஸ்டர்கள் வெளியான நிலையில், ஹிந்தி சினிமா போஸ்டர் வெளியாக இருந்தது. ஆனால், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லியோ படக்குழு X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “உங்களுக்கு நிகழ்ந்த பேரிழப்புக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் பிரார்த்தனைகள். இன்று வெளியாக இருந்த லியோ போஸ்டரை நாளை வெளியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…