Roshini Haripriyan [file image]
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் முகத்தில் கருப்பு கலர் பூசிக்கொண்டு நடித்த காரணத்தால் இவர் சரியக நடிக்க மாட்டிக்கிறார் அவருடைய ஒரிஜினல் கலரில் நடித்தாலே நன்றாக இருக்கும் என்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்தது.
ஆனால், விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத ரோஷினி ஹரிப்ரியன் தொடர்ச்சியாக சீரியலில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துக்கொண்டு நடித்து வந்தார். சீரியலும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர் இந்த சீரியலை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் கொடுத்த வரவேற்பை விட குக் வித் கோமாளி பெரிய வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லலாம்.
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சின்னத்திரையில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எதிர்மறையான கருத்துக்களை பார்த்துவிட்டு சினிமாவை விட்டு ஓடிடலாமா என யோசித்ததாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் எனக்கு சுத்தமாக நடிக்கவே வரவில்லை. சீரியலில் நடிக்கும் போது டேக் அதிகமாக சென்று கொண்டே இருக்கும்.
இன்னும் அட்ஜஸ்ட்மென்ட் தொடருதா? நடிகை யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!
சீரியலை பார்தவுடனும் எனக்கு நடிப்பு சரியாகவில்லை என கழுவி ஊத்துனாங்க எனவே சினிமாவை விட்டு நாம் போய்விடலாம் நமக்கு இது செட் ஆகாது என்று யோசித்தேன். பிறகு நான் இந்த சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் கூட வேறு யாரவது இதில் நடிப்பார்கள். எனவே, இன்னொருத்தருடைய வாய்ப்பை நாமும் நடிக்காமல் கெடுக்க கூடாது என்று எண்ணி விலகி விடலாம் என் முடிவெடுத்தேன்.
பிறகு அப்படியே படி படியாக எனக்கு கொஞ்சம் நடிக்க தெரிந்தது. பின் அப்டியே நடிக்கவும் ஆரம்பித்தேன் எனக்கு எதிர்மறையான விமர்சனங்களும் குறைந்தது” எனவும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது பெயர் வைக்கப்படாத ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…