பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு ஒருமுறை எலிமினேஷன் அரங்கேறி வருகிறது. அதன்படி இதுவரை போட்டியில் இருந்து ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோணிதாசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
இப்படி இருக்கையில், தற்போது 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளன. அதிலிருந்து ஒருவர், இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்குக்கு இருந்தது. அதன்படி, நேற்றைய எபிசோடியில் சந்தோஷ் பிரதாபி குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதனால் அங்கிருந்த போட்டியாளர்களும் ரசிகர்களும் காவலடைந்தனர்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் பிரதாப் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் “ரொம்ப நாள் கழித்து சிறிய வயதில் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி போகும்போது ஏண்டா போகலாம்னு இருக்கும் அந்த மாதிரி இப்ப குக் வித் கோமாளி-யிலிருந்து செல்வது அப்படித்தான் இருக்கு.
இன்னொன்னு சந்தோஷமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் என்னுடைய குடும்பத்தினர் மாதிரி அவங்க எல்லாரும் இருக்காங்க நல்லா சமைக்க போறாங்க அந்த ஒரு சந்தோஷம் இருக்கிறது. என்னால் யாரும் வெளியே செல்லவில்லை. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி, உங்களையும் குடும்பத்தினராக தான் பார்க்கிறேன். எனக்கு ஷூட்டிங் இல்லை என்றால் கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் திரும்பி வருவேன். அப்படி இல்லையென்றால், படத்தில் நடித்து உங்களை பெருமை படுத்துவேன் ” எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…