மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

Mansoor Ali khan - Seeman

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்ப சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நடிகை த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் கூறிய சர்ச்சை கருத்து குறித்த விவகாரத்தில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்

அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்புகோர நடிகர் சங்கம் பேசியது குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழ் சினிமாவில் சக நடிகர்கள் படம் வெளியாவதற்கு சிக்கல் வந்தபோது நடிகர் சங்கம் எங்கே போனது? விஜய்க்கு பிரச்சனை வரும் போது பேசியிருக்கா? விஜய்யை விட சிறந்த நடிகர் உண்டா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியதோடு, தமிழ்நாட்டில் நடிகர்கள் சங்கம் இருக்கா என்று இவ்வளவு நாட்களாக தெரியவல்லை.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்?

கர்நாடகா, ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் இருப்பது போன்ற நடிகர்கள் சங்கம் தமிழ்நாட்டில் இருக்குதா என்று கேள்வி எழுப்பினார். மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசி இருக்கமாட்டார். அவருக்கு தான் பேசியது தப்பா தெரியல, மன்னிப்பு கேட்கல, அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss