“உன்னை வெளியே அனுப்பனும்”…மணிமேகலையை திட்டிய பிரியங்கா…லீக்கான ஆடியோ?

விஜய் டிவி பிரபலங்கள் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் போன் காலில் பேசிக்கொண்டதாக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

manimegalai and priyanka fight

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் மணிமேகலை விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பேசும் பொருளாகியுள்ளது. சாதாரணமாக, காரணத்தை கூறாமல் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார் என்றால் இந்த அளவுக்கு பேசுபொருளாகியிருக்காது. ஆனால், மணிமேகலை அதற்கான காரணத்தைச் சொல்லி வெளியேறிய காரணத்தால் இவ்வளவு பேசுபொருளாகியுள்ளது.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணம் பற்றி மணிமேகலை கூறியிருந்ததாவது ” குக் வித் கோமாளி 5-வது சீசனில் இன்னொரு பெண் தொகுப்பாளர் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்ததாகவும், என்னை வேலை செய்ய விடாமல் தொகுப்பாளர் பகுதிகளில் வேண்டுமென்றே அடிக்கடி குறுக்கிட்டார் எனவும் பிரியங்கா பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகக் குற்றம் சாட்டி இருந்தார்.

புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் ‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன் எனவும் அதிர்ச்சியான அறிவிப்பை வெளியீட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மணிமேகலை விலகியதற்குப் பிரியங்கா தான் காரணம் எனக் கடுமையாகத் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த சூழலில், எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல, மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரும் போன் காலில் பேசிக்கொண்ட ஆடியோ என கூறப்பட்டதும் லீக் ஆடியோ வரலாகிக் கொண்டு இருக்கிறது. அதில், மணிமேகலையிடம் பிரியங்கா கோபத்துடன் பேச அதற்கு மணிமேகலை நீங்கள் பேசுவது ரொம்ப ரொம்ப டிஸ்ட்ரப்பா இருக்கிறது எனக் கூறுகிறார்.

அப்படி இருந்து விடாமல் பிரியங்கா ” உன்னை முதலில் வெளியே அனுப்பவேண்டும், யார் வெளியே போறாங்கனு பார்ப்போம் எனவும்” மணிமேகலையைப் பார்த்துச் சொல்கிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பிரியங்கா வன்மத்தைக் கொட்டுகிறார் எனத் திட்டவும் செய்து வருகிறார்கள்.

மேலும், பலரும் இது எடிட் செய்யப்பட்ட ஆடியோ, வேறு யாரையோ பற்றிப் பேசியதை ஒன்றாக வைத்து எடிட் செய்துள்ளார்கள் எனவும் கூறி வருகிறார்கள். இது எடிட் செய்யப்பட்ட ஆடியோ என்றால் கண்டிப்பாக இருவரும் விளக்கம் கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami