Shruti Haasan [file image]
ஸ்ருதிஹாசன் : தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன் . தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி, அடிக்கடி இவர் சமூக வலைத்தளங்களிலும், புகைப்படங்களை வெளியீட்டு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவது வழக்கமானது. அந்த வகையில், தற்போது ரசிகர் ஒருவர் கேட்கும் கேள்விக்கு கோபத்துடன் ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார். ரசிகர் ஒருவர் தென்னிந்திய மொழிகளில் எதாவது சொல்லுங்கள் என்பது போல கேட்டு இருந்தார்.
அதற்கு பதில் அளித்த நடிகை ஸ்ருதிஹாசன் ” இட்லி, சாம்பார், தோசை என்று கூறுவது சரியில்லை. அப்படி அழைப்பது அழகாக இல்லை. அப்படி அழைப்பதை என்னால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி கூப்பிட்டா சும்மா போக முடியாது. எனவே, வேடிக்கை கட்டுவது போல நடந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். ‘மூடிக்கொண்டு போங்க ‘ ” என கடும் கோபத்துடன் கூறியுள்ளார்.
இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஸ்ருதிஹாசனை பாராட்டி வருகிறார்கள். மேலும், நடிகை ஸ்ருதிஹாசன் ‘Dacoit: A Love Story’ என்ற தெலுங்கு – தமிழ் படத்திலும், சென்னை ஸ்டோரி என்கிற தமிழ் -ஆங்கிலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…