சிறுத்தை சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் சிவகார்த்திகேயன்.!? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதிய எ படத்தை சிறுத்தை சிவா இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்றுவிட வேண்டும் என கதை எழுதி வருகிறாராம் சிவா.
கலைப்புலி எஸ்.தாணு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னரே சிவாவை படம் இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதே போல வெங்கட் பிரபுவையும் மாநாட்டிற்கு பின் ஒப்பந்தம் செய்துள்ளார். அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க அவரிடம் கேட்கவே, அவர் சிறுத்தை சிவா என்றால் ஓகே. அவர் படம் குடும்ப செண்டிமெண்ட் படமாகவும், கமர்சியல் படமாகவும் இருக்கும் என விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
விரைவில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : தைப்பூச திருவிழா முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
February 11, 2025
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025
காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
February 11, 2025
“அனைவருக்கும் மகிழ்ச்சியான, தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” – பிரதமர் மோடி பதிவு.!
February 11, 2025