இணையத்தில் லீக்கான SK21 காட்சி…சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தை.?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பெரிய ஷெட்யூல் காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீரில் 75 நாட்கள் நடந்தது.
இந்த முதல் ஷெட்யூலை வெற்றிகரமாக முடித்ததை படக்குழுவினர் கொண்டாடினர். இப்பொது அடுத்த ஷெட்யூல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம்.
25 கோடிக்கு மல்லுக்கட்டிய கமல்ஹாசன்…தலைசாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!
தற்போது சென்னையில் வெளுத்த வாங்கிய கனமழையால் ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. SK21 படக்குழு சென்னையில் சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில், இரவு மழை பெய்யும் பொழுது, சில காட்சிகளை தனியாக வீடு ஒன்றை எடுத்து படம்கியுள்ளனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனால், ரசிகர்கள் சற்று அப்செட் ஆகி, அதனை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில், நடிகை சாய் பல்லவி கையில் ஒரு பெண் குழந்தையுடன் நடிக்கிறார். இந்நிலையில், படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கணவன் மனைவியாக நடிப்பதும், அவர்ககேள் இருவருக்கும் குழந்தையாக ஒரு பெண் குழந்தை நடிப்பதாக தெரிகிறது. இது உண்மை என்றால், சிவகார்த்திகேயன் கேரியரில் காதல் செய்து கல்யாணம் முடிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். முதல் முறையாக கணவன் மனைவியாகவும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பது போலவும் இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது.
இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அயலான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025