நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ், படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
கண்டிப்பாக காமெடி அதிகமாக இருக்கும் திரைப்படமாகதான் இது உருவாகி வருகிறது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. படம் வெளியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்தாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஏனெனில் இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி, மற்றும் டாக்டர் பட பிரபலம் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.இதனால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.
இந்த நிலையில், படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிலிருந்து ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது, புகைப்படத்தில் ஒரு டீ கடையில், வடிவேலுவுடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிரசாத் ஆகியோர் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்
மேலும், இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…
சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை…
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…