விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி.!

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி துறைத்தலைவர் ஒருவர் பேராசிரியர்கள், மாணவிகளிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

EPS TamilNadu

சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாகா கமிட்டி என்பது, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், விசாரணைகள் மேற்கொள்வதற்கும், தீர்வுகள் காணவும் அமைக்கப்படும் ஒரு குழு ஆகும்.

இந்த குழுவே பல கல்லூரிகளில் மற்றும் தொழில் நிறுவனங்களில் செயல்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் சென்னை பல் மருத்துவ கல்லூரியில் விசாகா கமிட்டி அமைக்கவில்லை என தெரிகிறது. தினம் தினம் ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகின்றன என்பதற்கு இது போன்ற இந்த ஆட்சியின் நிர்வாக குறைபாடுகள் தான் மிக முக்கிய காரணமாக உள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்ததால் அப்பெண் பேராசிரியை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்? கல்வி வளாகங்களில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கு கண்டனம். பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும் ”’ என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்