12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி.., இந்த 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.!
மத்திய கிழக்கு அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830 மணி அளவில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.
பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அதற்கடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். இதனிடையே, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியிலிருந்து ஆந்திர கடலோர பகுதிகள் வரை ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
7 மாவட்டங்களில் கனமழை
மேலும், தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025