சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, அடையார், வடபழனி, கோட்டூர்புரம், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயில் அடித்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் […]
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில், தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, கிண்டி, நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதனிடையே, மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், […]
சென்னை : வெயில் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் வெயில் தாக்கம் குறைந்த மாதியே இல்லை. அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.4 செல்சியஸ், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழைக்கு […]
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது. மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இது நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு […]
வானிலை மையம் : மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய ஜார்க்கண்ட் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான […]
வானிலை நிலவரம் : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கனமழையும், கேரளாவில் மிக கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்கத்தில், இன்று 7 முதல் 11 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் […]
சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரு மாநிலங்களிலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோவை, நீலகிரி ஆகிய […]
வானிலை : தமிழகத்துக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டும் இருந்தது. திடீர் காலநிலை மாற்றத்தால் ரெட் அலர்ட் வாபஸ் பெற்றப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், ஜுன் 24, 25, 26 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது […]
வானிலை : தமிழகத்தில் வரும் ஜூன் 22-ஆம் தேதி மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]
சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற சில குறிப்பிட்ட இடங்களில் மீதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய […]
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (05.06.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை (06.06.2024) தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, […]
தென்மேற்கு பருவமழை : கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று (30-05-2024) துவங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு- மஞ்சள் அலர்ட் வழக்கத்தைவிட சீக்கிரமாக தொடங்கிய இந்த தென்மேற்கு பருவமழையால், இந்த […]
ரெமல் புயல் : நாளை நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே ரெமல் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 8.30 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-விலிருந்து சுமார் 440 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும், மேற்கு […]
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (24ஆம் தேதி காலை) மாறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு […]
சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லையில் ஆகிய 8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் இன்று […]
சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 23) அதிகாலை 5:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய […]
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (22.05.2024) கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், […]
சென்னை : பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தமிழகத்தில் இன்று (மே 22) பகல் 1 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை […]
சென்னை : தற்போது, வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நீடித்து வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கோடை மழை பெய்யத் தொடங்கியதால் வெப்பம் தணிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வந்தது. தற்போது, இதன் காரணமாக, இன்று (22-4-2024) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது […]
சென்னை: அடுத்த மூன்று நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாட்ட வாரியான பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து […]