7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தற்போது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலிற்கு வில்லனாக நடித்து வருகிறார்.
என்னதான், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வந்தாலும், பல ரசிகர்கள் வாலி, குஷி, போன்ற ஹிட் படங்களை போல ஒரு படம் இயக்கி மீண்டும் ஒரு பெரிய ஹீட் கொடுப்பாரா என காத்துள்ளனர். அந்த வகையில், அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறாராம். அந்த படத்தில் ஒரு கார் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம், அந்த கார் செர்மனியில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்திலும் ஒரு புதுமுக ஹீரோயினை அறிமுகப்படுத்தவுள்ளாராம். படத்திற்கு கில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை படத்தை தொடர்ந்து எஸ்,ஜே. சூர்யா ஏழு ஆண்டுகளுக்கு பிறகு படத்தை இயக்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025