Sarfira [File Image]
சர்ஃபிரா : கடந்த 2020ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் சாதனைப்படைத்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ (SARFIRA) படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, சூரரைப் போற்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதில் அப்படியே சூர்யாவுக்கு பதில் அக்ஷய் குமார் நடித்தது போலவே டிரெய்லர் உருவாகி உள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில், ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தில் பரேஷ் ராவல், ராதிகா மதன், ஆர். சரத் குமார் மற்றும் சீமா பிஸ்வாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மேலும் இதில், சூர்யா, சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தொடர் தோல்வியை சந்தித்து வரும், அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல், சுதா கொங்கரா இதன் மூலம் இந்தியில் வெற்றி பெருக்கிறாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…