Rajinikanth - Yogi Adityanath [File Image]
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தற்போது, இந்த பயணத்தில் இருக்கும் நாட்களில் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று, லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நாளை முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படத்தைப் பார்க்கிறேன் என்றார்.
இந்நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தைப் பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினி தனது ஆன்மீக சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, ‘ஜெய் பீம்’ புகழ் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் தனது அடுத்த படமான ‘தலைவர் 170’ படப்பிடிப்பைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ஒரு ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், விநாயகன், தமன்னா பாட்டியா, ஜாபர் சாதிக், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மிர்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…