தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முதலில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது .ஆனால் அதே இடத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருந்தார்.
ஆனால் நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி நடத்த அனுமதி கிடைக்கவில்லை .மாற்றாக மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடத்த அனுமதி கிடைத்து தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரில் இன்று நடைபெற இருந்த எஸ்.வி.சேகரின் நாடகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ‘அல்வா’ என்று பெயர் வைத்த நாடகம் காமெடி தர்பார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் நாடக தலைப்பை மாற்றியது தொடர்பாக எஸ்.வி.சேகர் கூறுகையில், நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன்.மேலும் இடத்தை மாற்றியது தொடர்பாக அவர் கூறுகையில்,அவர்கள் தேர்தலுக்கு இடத்தை மாற்றினார்கள்.அதனால் நானும் மாற்றினேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…