இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தாராள பிரபு. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா ஹோப் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விந்து தானம் செய்யும் ஒரு பையனின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது
குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு மருத்துவமனை தான் குழந்தை ஃபர்டிலிட்டி மருத்துவமனை. இதனை நடிகர் விவேக் நடத்தி வருகிறார். குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகள் பலர் விவேக்கின் கிளினிக்கு நம்பி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பயனில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது மட்டுமல்லாமல், இந்த கிளினிக் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் ஆகி விடுகிறது.
இதனால் விவேக் ஒரு ஆரோக்கியமான ஸ்பேர்ம் டோனர் இருந்தால் நல்லது என கருதி அப்படி ஒருவரை தேடுகிறார். இந்தப் படத்தின் ஹீரோவான ஹரிஷ் கல்யாண் வேலை இல்லாமல், அவர் அம்மா வைத்திருக்கும் பியூட்டி பார்லர் ஒன்றில், அம்மாவிற்கு உதவியாக பணியாற்றி வருகிறார் அந்த நிலையில், விவேக், தனது கிளினிக்கில் ஸ்பேர்ம் டோனராக பணியாற்ற ஹரிஷ் கல்யாணை அணுகுகிறார். ஆரம்பத்தில் எதிர்த்த ஹரிஷ், குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு இதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர் வங்கியில் பணிபுரியும், படத்தின் ஹீரோயினான தான்யா ஹாப் இவருக்கு அறிமுகமாகிறார். பின் இருவரும் காதலித்து வருகின்றன. இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சிறிது நாட்களில் குழந்தை வேண்டும் எனவிரும்பிய தான்யா ஹரிஷை மருத்துவமனைக்கு அழைக்கிறார்.
ஹரிஷ் ஒரு ஸ்பேர்ம் டோனர் என்று சொல்ல தயங்குகிறார். அதன்பின் வேறு வழியின்றி தனது தொழிலை கூறியுள்ளார்.. கோபமுற்ற தான்யா ஹரிஷை பிரிந்து செல்கிறார். தனது மனைவியுடன் சேருவதற்காக பல முயற்சிகள் எடுத்தும், பயனில்லாமல் போனது. அவருடைய தாயாரும் இவரை வெறுத்து தள்ளிய நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகிறார் ஹரிஷ்.
இந்த நிலையில் ஹரிஷ் தாய் நடத்திவரும் பியூட்டி பார்லரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில், பல கோடி ரூபாய் பணம் அந்த கடையில் கைப்பற்றப்படுகிறது. இதனால் அவரது தாயாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…