Ghilli Re Release [file image]
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது. இந்த படம் கோலிவுட்டின் முதல் 50 கோடி வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளர். வில்லனாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருப்பார். இது தான் படத்திற்கான ஹிட் என்றே சொல்லலாம். இவ்வாறு நடிகர் விஜய் கேரியரில் முக்கியமான படமான ‘கில்லி’ 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 600 திரையரங்குகளில் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முதல் காட்சியை காணக் குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்தும், நடனமாடியும் ‘கில்லி’ ரீ-ரிலிஸை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது வழக்கமான மறுவெளியீடு இல்லாமல், தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்து சாதனை படைத்துள்ளனர். ஆம்…இப்படம் தமிழகம் மட்டுமல்லாமல், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில், புதுப் படம் வெளியானது போல் கில்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…