தளபதி விஜயின் 66வது திரைப்படத்தில் தமன் இசையில் முதல் பாடலை செந்தில் – ராஜலக்ஷ்மி ஆகியோர் இணைந்து இன்று பாட உள்ளனர்.
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் அவருக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்துவிட்டார். பீஸ்ட் படத்தின் மீதம் ஏதேனும் காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான ஷூட்டிங் மட்டும் நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் அதற்கான வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தளபதி விஜய் தனது அடுத்த 66வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி விட்டார். கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் அதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.
தளபதி 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்த படத்துக்கான பாடல் பதிவு தற்போதே தொடங்கி விட்டது. தளபதி 66 திரைப்படத்தின் முதல் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் – ராஜலக்ஷ்மி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனராம். இந்த பாடல் பதிவு இன்று சென்னையில் நடைபெற உள்ளதாம்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…