நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

New Mexico Flood

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த நீரோட்டத்துடன் கூடிய வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன.

நியூ மெக்சிகோவின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச், ருய்டோசோவில் தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும், உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த திடீர் வெள்ளத்தால் ருய்டோசோ மட்டுமல்ல, நியூ மெக்ஸிகோவில் உள்ள லிங்கன் கவுண்டி மற்றும் ஹாலிவுட்டும் பாதிக்கப்பட்டன.

நியூ மெக்சிகோ நதியில் நீர் மட்டம் திடீரென 30 நிமிடங்களில் கிட்டத்தட்ட 20 அடி உயர்ந்துள்ளதாக ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வெள்ளத்தில் சிக்கி யாராவது காயமடைந்தார்களாஅல்லது உயிரிழப்பு சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, இந்த திடீர் வெள்ள அவசரநிலைக்கு மத்தியில் ருய்டோசோவில் பல அடைக்கல மையங்கள் அமைக்கப்பட்டதாக ருய்டோசோ கிராமம் பேஸ்புக்கில் ஒரு பதிவில் அறிவித்துள்ளது. அதன்படி, 501 சுடெர்த்தில் உள்ள ருய்டோசோ சமூக மையம், ENMU-Ruidoso 709 Mechem இல் ஆல்பர்ட்சன்ஸ், 103 போனிடா பூங்கா, கேபிடனில் உள்ள நசரேன் அங்கஸ் தேவாலயம் ஆகிய மையங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்குப் பிறகு 160 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக மாநில ஆளுநர் நேற்றைய தினம் தகவல் தெரிவித்தார். இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ள இந்த துயரச் சம்பவத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அளவில் அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்