நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த நீரோட்டத்துடன் கூடிய வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன. நியூ மெக்சிகோவின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச், ருய்டோசோவில் தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும், உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை […]