சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.நடிகை அருணாவின் சென்னை நீலாங்கரை வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Actress Aruna

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், அருணா மற்றும் அவரது கணவர் மோகன் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா. அவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிறுவனம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்