சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு இந்த சோதனையை மேற்கொண்டதாகவும், அருணா மற்றும் அவரது கணவர் மோகன் குப்தாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா. அவரது கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு […]