vijay makkal iyakkam [Image Source : File Image]
தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று முழுவதும் இலவச பேருந்து இயக்கப்படுகிறது.
நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் விஜய் தனது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகரின் சிறப்பு தினத்தை கொண்டாடும் வகையில், பல நலத்திட்டங்கள் மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த வகையில், பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு ரத்தம், உணவு மற்றும் பிற நலப் பொருட்களை தானம் ஒரு பக்கம் செய்ய, புது முயற்சியாக விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் கேரளாவின் கொயிலாண்டி ஆகிய இடங்களில் இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், பல இடங்களில் விஜய்க்கு நாளைய முதல்வர் என்று போஸ்டர் அடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பெயர் தான் எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதற்கிடையில், லியோ படத்தின் முதல் சிங்கிள், ‘நா ரெடி, இன்று மாலை வெளியிடப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் விஜய் பாடிய பாடல் இணையத்தை கலக்க இருக்கிறது. மேலும் படம் தசரா விழாவிற்காக அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…