நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது புதிய கேங்ஸ்டர் படமான ‘லியோ’ படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.
இப்பொது, நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சமீபத்தில், வெளியான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, அவரது தந்து பெற்றோர்களை கண்டுகொள்ளவில்லை என கருத்துக்கள் எழுந்தது.
ஆனால், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு யூட்யூப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இந்த தருணத்தில் அவரது ரசிகர்களை அவர் மகிழ்விப்பது தான் முக்கியம். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில், விஜய் தனது பெற்றோர் ஷோபா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் 50-வது திருமண நாளை கொண்டாடியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்கின்றனர். இருந்தாலும் தனது அம்மா மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…