vijay and anirudh [File Image]
சென்னை : பொதுவாகவே விஜய் படங்கள் என்றாலே, அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காகவே அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் கூடுதலாக உழைத்து நல்ல பாடல்களைக் கொடுப்பார்கள்.
அப்படி தான் இதுவரை இசையமைப்பாளர் அனிருத் விஜய்யுடன் கூட்டணி வைத்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அனிருத் மற்றும் விஜய் இருவருடைய கூட்டணி முதன் முறையாக கத்தி திரைப்படத்தில் இணைந்தது.
அந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணமாகவே அமைந்தது என்றே சொல்லலாம். இதன் காரணமாக அந்த சமயம், விஜய் அனிருத்துக்கு பியானோ ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்களுடைய கூட்டணி, மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய படங்களிலும் இணைந்தது. இந்த படங்களின் பாடல்களுமே மிக்பெரிய ஹிட் ஆனது.
அதைப்போல, அனிருத் பின்னணி இசையும், இந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. விஜய் படங்களுக்கு, ஆரம்பக் காலத்தில் பல இசையமைப்பாளர்கள் ஹிட் பாடல்களைக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இந்த காலகட்டத்திற்கு ஏற்றதுபோலவும், விஜய் ரசிகர்கள் முழுவதுமாக திருப்தி அடையும் படி ரசிக்கும் பாடல்களைக் கொடுப்பது என்றால் அனிருத் தான்.
இதன் காரணமாகவே, அனிருத்தை விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த படங்களுக்கு அவரை தேடுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். அனிருத்தும் விஜய் படங்கள் என்றாலே தனி ஒரு ஸ்பெஷலாக இசையைக் கொடுத்துவிடுகிறார். எனவே, அந்த ஸ்பெஷல் கொடுப்பதன் காரணமாகத் தான் விஜய் ரசிகர்கள் தளபதி 69 படத்திற்கு அனிருத் தான் இசையாக இருக்கவேண்டும் என ஆசையைக் கூறிவருகிறார்கள்.
இந்த படம் தான் விஜய்க்குக் கடைசி படம். எனவே, கடைசி படத்தில் ரசிகர்களுக்குப் பிடித்தபடி, துள்ளலான பாடல்கள் இருக்கவேண்டும் அது அனிருத் அருமையாகச் செய்வார் எனத் திட்டமிட்டு விஜய் தன்னுடைய 69-வது படத்திற்கும் அனிருத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தளபதி 69 இசையமைப்பாளர் அனிருத் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் , இந்த இசையமைப்பாளர் தான் தளபதி 69 படத்துக்கு இசையமைக்கப் போகிறார் என்று மற்ற இசையமைப்பாளர்கள் பெயர் குறித்த தகவல் வெளியானால், கூட சற்று கடுப்பாகி அனிருத் தான் வேண்டும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…