mankatha vijay [File Image]
Mankatha : விஜய் மங்காத்தா படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித்குமாரின் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று அவருடைய 50-வது படமான மங்காத்தா படத்தை கூறலாம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருப்பார். படத்தில் அவருடன் ஆக்சன் கிங் அர்ஜுனும் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமரர்சன ரீதியாகவும் சரி அந்த சமயம் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூலில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. அந்த அளவிற்கு அருமையான படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்து இருப்பார். இந்த படத்தில் அர்ஜுன் நடித்த பிரித்திவ் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார்.
மங்காத்தா படம் எடுக்கும் ஐடியா வந்தபோதே இயக்குனர் வெங்கட் பிரபு அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்யை வைத்து தான் எடுக்கவேண்டும் என்று ஆசைபட்டாராம். ஆனால், அந்த சமயம் விஜய் வேலாயுதம் படத்தில் பிசியாக இருந்தார். மற்றோன்று படத்தில் அஜித்திற்கு தான் அதிக அளவில் மாஸ் காட்சிகள் இருக்கிறது.
எனவே, இந்த கதையை விஜையிடம் சொன்னால் அவர் நடிப்பாரா இல்லையா என வெங்கட் பிரபுவுக்கு சந்தேகம் வந்ததாம். விஜய் சம்மதிக்கமாட்டார் என்று நினைத்து தான் வெங்கட் பிரபு இந்த விஷயத்தை விஜய் கிட்ட சொல்லவே இல்லயாம். படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது இந்த கதாபாத்திரத்தை உங்களை வைத்து எடுக்கலாம் என்று இருந்தேன் என்று கூறியவுடன் அதற்கு விஜய் ” முன்னாடியே சொல்லி இருந்தால் நானே நடித்து இருப்பேன்” என்று கூறினாராம். இந்த காரணத்துக்காக தான் விஜய்யால் மங்காத்தா படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இந்த தகவலை வெங்கட் பிரபுவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், மங்காத்தா படத்தை வெளி வந்த சமயத்தில் திரையரங்குகளில் பார்ப்பதை தவறவிட்டவர்களுக்காகவே மீண்டும் வரும் மே 1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகிறது. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க் விரும்புபவர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…