Thangalaan [file image ]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பசுபதி பார்வதி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருந்தது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் முன்னிட்ட மொழிகளில் வெளியாகயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
தப்பான ஒருத்தரை காதலிச்சிட்டேன்! தனுஷ் பட நடிகை வேதனை!
இருந்தாலும் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் படி, தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதம் படம் வெளியானால் அது சரியாக இருக்காது மார்ச் மாதம் படம் வெளியானால் சரியாக இருக்கும். அதற்குள் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்று படக்குழு முடிவெடுத்து படத்தை தாமதமாக வெளியிட முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…