the kerala story box office [Image source : file image ]
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று 100 கோடியை தொடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி ‘திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளை அள்ளி வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 7 நாட்களில் 94 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று 8-வது நாளாக படம் 100 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாளுடன் ஒப்பிடுகையில் 8-வது நாளில் அதன் வசூல் அதிகரிக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டமாக பலரும் சென்று வருகிறார்கள். எனவே, இப்படம் ரூ.100 கோடி வசூலை இன்று கடந்துவிடும் என தெரிகிறது. முதல் நாளில் ரூ 8.03 கோடியுடன் திரையரங்குகளில் ஓடத் தொடங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ முதல் வார இறுதியில் நல்ல வசூலை ஈட்டியது. அதனை தொடர்ந்து, சனிக்கிழமை ரூ 11.22 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ 16.40 கோடியும் வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து , திங்கட்கிழமை ரூ.10.07 கோடியும், செவ்வாய்கிழமை ரூ.11.14 கோடியும், புதன்கிழமை ரூ.12 கோடியும், வியாழன் அன்று ரூ.12.50 கோடியும் வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வருவதால் வசூலில் படம் சில சாதனைகளையும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை இயக்குனர் லதா சீனிவாசன் எழுத, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கியுள்ளார். படத்தில் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி, சோனியா பாலா, தேவதர்ஷி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…