sk 21 [File Image]
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, நேற்று முன் தினம், அசோக் – கீர்த்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்த்து கொண்டனர்.
அந்த வகையில், இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். புதிய மண ஜோடிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், முகமே வாடிய நிலையில் சிவகார்த்திகேயன் ஆள் அடையாளமே தெரியாதது போல் மாறியுள்ளார்.
மாவீரன் படத்தை தோடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 21’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்பொழுது, சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சூப்பர்ஃபிட்டாக மாறியுள்ளார். இந்த திரைப்படம் போர் பின்னணியில் உருவாகி வருவதாகவும், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். முகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சிஆர் சாய் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு முதல் செட்யூலை முடித்தது.
காஷ்மீரில் 75 நாட்கள் ‘SK 21’ படத்தின் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, படத்தின் அடுத்த ஷெட்யூலை சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி : மாவட்டத்தில், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025 ஜூலை 31 அன்று…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. முன்னாள் துணைத்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினஙக்ளுக்கு முன், லேசான…
சென்னை : ஹாஸ்பிடலில் இருந்தவாறே முதல்வர் பணி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் 3-வது நாளாக சிகிச்சை பெற்று…