Abhirami [File Image]
கமல்ஹாசன் இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு சமஸ்தானம், ஸ்ரீராம், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இந்த படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால், விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அவருடைய பெயரும் வெளியே தெரிந்தது. ஆனால், இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு சில ஆண்டுகளாக அபிராமி சினிமாவில் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார்.
திடீரென அபிராமி சினிமாவை விட்டு விலகிய காரணத்தால் அந்த சமயம் பல வதந்தி தகவல் பரவியது. ஆனால், இதுவரை விருமாண்டி படத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் என் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்ற காரணத்தை பற்றி அபிராமி பேசாமல் இருந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படிப்பு மீது ஆர்வம் அதிகமாக இருந்தது எனவே நான் விருமாண்டி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே வெளிநாட்டுக்கு சென்று படிக்கவேண்டும் என முடிவெடுத்து அதற்கான விரவங்களை நிரப்பி பதிவு செய்து இருந்தேன். விருமாண்டி படத்தில் நடித்து முடித்த பிறகு நான் அங்க செல்ல நேரம் சரியாக இருந்தது.
விருமாண்டி முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று நன்றாக படித்தேன் அங்கு தான் என்னுடைய டிகிரியை நான் முடித்தேன். அங்கு எனக்கு வேலையும் கிடைத்தது 6 வருடங்கள் அங்கு தான் வேலை செய்தேன். பிறகு விஸ்வரூபம் படத்தில் டப்பிங் பேசுவதற்காக வாய்ப்பு கிடைத்தது அதில் பேசினேன் அதிலிருந்து இந்த துறையை விட்டு நாம் என் போகவேண்டும் என முடிவெடுத்து மீண்டும் நடிக்க தொடங்கி விட்டேன்” எனவும் அபிராமி தெரிவித்துள்ளார். மேலும் அபிராமி தற்போது விஜய் சேதுபதியின் 50-வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…