venkatesh bhat [Image source : File image]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் வெங்கடேஷ் பட் இன்று சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுடன் சென்றுள்ளார். அந்த சமயம் எஸ்கலேட்டரில் செல்லும்போது அவருடைய மகள் கால்களில் அனிருந்த செருப்பு எஸ்கலேட்டரில் சிக்கி தூண்டாகியுள்ளது. உடனடியாக செருப்பை கழட்டிவிட்டு அவருடைய மகள் நகர்ந்துள்ளார்.
அதிர்ஷ்ட வசமாக அவருடைய பெண் கால்கள் தப்பி விட்டதாகவும் இனிமேல் இங்கு வருபவர்கள் சற்று கவனமாக இருங்கள் எனவும் வெங்கடேஷ் பட் வீடியோவும் வெளியீட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது ” நானும் என்னுடைய பொன்னும் சென்னை பீனிக்ஸ் மாலிற்கு வந்தோம்.
அப்போது எஸ்கலேட்டரில் என்னுடைய மகளுடைய செருப்பு மாட்டிக்கொண்டது. எடுக்கவில்லை என்றால் காலோடு சேர்த்து இழுத்துவிட்டு சென்று இருக்கும். நான் நல்ல வெளியாக என்னுடைய மகள் கையை பிடித்து இழுத்தேன். எனவே இங்கு வருபவர்கள் குழந்தையை அழைத்து வருபவர்கள் சற்று கவனமாக இருங்கள்.
இது ரொம்போ ரொம்போ சீரியஸான விஷயம் ரொம்போ ஜாக்கிரதையா இருங்க குழந்தைகளை ஜாக்கிரதையா பார்த்துக்கொள்ளுங்கள். இது பற்றி இந்த மாலின் நிறுவனர்களிடம் புகார் அளித்துள்ளேன். எனவே தயவுசெய்து ஜாக்கிரதையாக இருங்கள்” எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மற்றோரு வீடியோவில் ” நான் என்னுடைய மகளுக்கு மாலில் நடந்த சம்பவம் குறித்து ஒரு வேண்டுகோள் வீடியோவை வெளியீட்டு இருந்தேன்.
அந்த விடீயோவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தீர்கள் அதற்கு மிகவும் நன்றி. எனக்கு நடந்த இதே போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று தான் வெளியிட்டேன். பிறகு மாலில் இருந்த அதனுடைய முக்கிய நபர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். தொடர்பு கொண்டு இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம் என்று சொன்னார்கள்” எனவும் செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…