urvashi (actress) [File Image]
முந்தானை முடிச்சி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்வசி. இவர் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமின்றி எல்லா வித கதாபாத்திரங்களிலும் நடிக்க கூடிய நல்ல நடிகை. தமிழில் மட்டுமின்றி, ஊர்வசி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலே கடந்த 2000-ஆம் ஆண்டு மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். ஆனால், நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்துகொண்டபோது நடிகை ஊர்வசி குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமையானதாகவும் இதனை அவரே வெளிப்படையாக கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அந்த சமயம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த குடிப்பழக்கத்திற்கு காரணமே தன்னுடைய கணவர் தான் எனவும் அவர் கூறினாராம். குறிப்பாக ஊர்வசி மது குடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு அவருடைய கணவர் மனோஜ் கே.ஜெயன் தான் மது ஊற்றி கொடுப்பாராம்.
பிறகு ஊர்வசிக்கும் அவருடைய மாமியார் மாமனாருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட காரணத்தால் நடிகை ஊர்வசி மனோஜ் கே.ஜெயனை விவாகரத்து செய்துகொண்டாராம். இந்த தகவலை பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நடிகை ஊர்வசி இப்போது சிவபிரசாத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகை ஊர்வசிக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு அவர் அடிமையானதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பகீரை கிளப்பியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…