சினிமா

அந்த மாதிரி காட்சியில் நடித்த வரலட்சுமி சரத்குமார்! இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம்!

Published by
பால முருகன்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டு பிஸியான நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது  தேஜா மார்னி என்பவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோடபொம்மாலி பிஎஸ்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார்  போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் 24ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி சரத்குமார் படம் பற்றி பேசியுள்ளார்.

அந்த மாதிரி ரோலில் நடிக்க காத்திருக்கும் ஷிவானி ராஜசேகர்! செம தில்லு தான் உங்களுக்கு!

இது குறித்து பேசிய அவர் ” நான் இதுவரை எந்த படத்திலும் புகை பிடிக்கும் காட்சியில் நடித்ததில்லை. ஆனால், ‘கோட்டா பொம்மாலி பி எஸ்’ படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் முதல்முறையாக புகை பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறேன். எனவே, இந்த படத்தில் நடிக்கும் போது அந்த காட்சி தான் எனக்கு சவாலாக இருந்தது. படத்தை பொறுத்தவரையில் நான் தான் ஹீரோவாக உணர்கிறேன். ஏனென்றால், படம் அப்படி தான் வந்து இருக்கிறது.

இதுவரை நான் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், தெலுங்கில் முதன் முதலாக போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் தான் நடித்து இருக்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என நான் நம்புகிறேன். படத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” எனவும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய வரலட்சுமி ” எனக்கு எல்லா விதமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. ‘வரலக்ஷ்மி நிறைய வெரைட்டியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று மக்கள் வாயில் இருந்து வார்த்தை வரும் அளவிற்கு படங்களில் நடிக்கவேண்டும். என்னுடைய ‘ஹனுமான்’ தெலுங்குப் படம் சங்கராந்தி அன்று வெளியாகிறது அந்த படமும் நன்றாக இருக்கும் எனவும்” வரலட்சுமி  கூறியுள்ளார். இதுவரை வில்லி வேடத்தில் நடித்து கலக்கி வந்த இவர் தற்போது புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…

8 minutes ago

“சுந்தரா டிராவல்ஸ் படத்துல வர மாதிரி பஸ் எடுத்துட்டு கிளம்பிட்டாரு பழனிச்சாமி” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

33 minutes ago

இந்த 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…

51 minutes ago

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்.!

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…

1 hour ago

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

2 hours ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago