எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார் என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

edappadi palanisamy and amit shah

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு கட்சிகளும் இறங்கியுள்ள நிலையில். அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி” ? என்பது தான். இந்த கேள்விக்கு பலமுறை கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தாலும் திரும்ப திரும்ப இந்த கேள்விகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.

அதற்கு முக்கியமான காரணமே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுக அரசு மீது மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளதாகவும், ஊழல், குடும்ப அரசியல், மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “எங்கள் கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய அளவிலும், எடப்பாடி  பழனிசாமியின் தலைமையில் மாநில அளவிலும் மக்களின் ஆதரவைப் பெறும் எனவும், தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ தான். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான், ஆட்சியிலும் பங்கேற்கும் என பேசியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

அமித்ஷா இப்படி கூறியவுடன் இந்த டாப்பிக் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது. இந்த சூழலில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” கூட்டணி ஆட்சி என்பது கிடையாது, எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” எங்களது கூட்டணி தெளிவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. 2026 தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.  கூட்டணி ஆட்சி இல்லை, எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார். அதனை நீங்கள் புரிந்துகொள்ளாமல் தவறாக புரிந்துகொண்டால் நாங்கள் என்ன செய்வது. இந்த கட்சிக்கு தலைமை தாங்குவது நான் தான். எனவே, நான் எடுப்பது தானே முடிவு?

பிறகு ஏன் இதயே தோண்டி குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்…உங்களுக்கு எதாவது செய்திவேண்டும் என ஊடகங்கள் இப்படி செய்கிறீர்கள். நாங்கள் இருவரும் அமைந்து தெளிவுபடுத்திக்கொண்டோம். அதில் இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என்பது முடிவு செய்யப்பட்டது” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்