அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட! “இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க” – முதல்வர் ஸ்டாலின்.!

தன் குடும்பத்தை Raid-லிருந்து காப்பாற்ற, அமித்ஷா கதவை தட்டி, கட்சியை அடமானம் வைத்த பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

MK Stalin - TN Govt

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு Tata, Bye bye சொல்லி வருகிறார்கள். இந்த தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக Goodbye சொல்ல போகிறார்கள். மக்கள் இனி உங்களை நம்பபோவது இல்லை.

தமிழ்நாட்டு மக்கள்தான் என் குடும்பம் அவர்களுடன்தான் என்றும் இருக்கிறேன்.., இருப்பேன், இருந்தே தீருவேன். தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சிதான் இந்த ஸ்டாலினுடைய ஆட்சி. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அதிமுக-வினரின் குடும்பத்தினருக்கும் பயணளிப்பதை எடப்பாடியால் மறுக்க முடியுமா? கலைஞரின் மகன் நான். சொன்னதை செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன். அதை உறுதியாக செய்வேன்.

மக்கள் இனி பழனிசாமி மீது நம்பிக்கை வைக்க தயாராக இல்லை, அதிமுக கட்சிக்காரர்களே “அதெற்கெல்லாம் நீ சரிபட்டு வரமாட்ட” என பழனிசாமியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள். இதை தெரிந்துகொண்ட இபிஎஸ் சுந்தரா ட்ராவல்ஸ் பஸ்-ல் சென்று, அதில் வரும் புகைபோல் பொய் பேசுகிறார்.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாறவில்லை, பா.ஜ.க.வை நம்பி நீங்கள்தான் ஏமாந்திருக்கிறீர்கள். தன் குடும்பத்தை Raid-லிருந்து காப்பாற்ற, சுயநலத்திற்காக அதிமுகவை அடமானம் வைக்க, இபிஎஸ் அமித் ஷா வீட்டு கதவை தட்டினார். பாஜகவால் முன்பு தோற்றதாக கூறிவிட்டு, அதே கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் குடும்ப பாசமா?” என சரமாரியாக சாடி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்