நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு பயம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.5 கோடி மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 1 கோடி மனுக்களுக்கு, அதாவது 95% மனுக்களுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, 2,344 ஊரக முகாம்கள் மூலம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா பேசியிருந்தார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து பேச தொடங்கிவிட்டார்கள். உதாரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக இந்த திட்டத்தை பற்றி விமர்சனம் செய்து பேசி வருகிறார். நேற்று ” அடுத்தாண்டு தேர்தல் வருவதால் தி.மு.க. நடத்தும் நாடகம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” என விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடியும் கொடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர் ” எடப்பாடி பழனிசாமி விமர்சனம் என்ற பெயரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் ” என தெரிவித்தார்.
இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய அவர் “விமர்சனம் என்ற பெயரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக அவருக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த திட்டத்தை பார்த்து அவர் பயப்படுகிறார். அதனால் தான் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை பார்த்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவரே போதும். இந்த திட்டத்தில் என்னென்ன சேவைகள் இருக்கு, என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லி இருக்கிறார். இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” எனவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் எடப்பாடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து விமர்சித்தும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் வருவது போல பஸ்ஸை எடுத்துக் கொண்டு கெளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த பஸ்ஸிலிருந்த்து புகை வருவதுபோல, பழனிசாமி வாயிலிருந்து பொய்யும், அவதூறும் வந்து கொண்டிருக்கிறது” எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025