GOAT Update [file image]
விஜய்: நடிகர் விஜயின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து கொண்டிருக்கும் கோட் படத்திற்கான அப்டேட்டுகளை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல் அப்டேட்டாக கோட் படத்தின் 2-வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. அந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும், அவருடன் மறைந்த பாடகி இளையராஜாவின் மகளான பவதாரணியின் குரல் ஏஐ டெக்னாலஜி (AI Technology) மூலம் கொண்டுவரப்பட்டு அந்த பாட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பாடல் மட்டுமின்றி மற்றொரு அப்டேட்டும் கொடுக்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் நல்லிரவு 12:01 மணிக்கு கோட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகிறது என முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது அந்த அப்டேட் ரெடியாகி உள்ளது அந்த அப்டேட் வேற எதுவும் இல்லை விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தை வைத்து ஒரு மினி டீசரை எடிட் செய்து பட குழு வெளியிட்டுள்ளது.
இந்த டீசரில் வரும் இசையும் விஜயின் முகமும் பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருப்பதால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த கோட் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…