தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து திரும்ப திரும்ப ரசித்து பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று “கில்லி”. விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
சமீபத்தில் இந்த படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி படத்தில் நடித்த நடிகர்கள் நேர்காணல் மூலம் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசினார்கள்.
அந்த வகையில், கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நான்சி ஜெனிஃபர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது ” கில்லி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தை என்னால் மறக்கவே முடியாது. முதலில் இயக்குனர் தரணி சாருக்கு நன்றி விஜய் சார் நிஜமாகவே என்கிட்ட தங்கச்சி மாதிரிதான் பழகினார். என்னை அவருடைய சொந்த தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டார். படத்தின் படப்பிடிப்பில் நானா சென்று யார்கிட்டேயும் பேச மாட்டேன். யாரையும் தொல்லை பண்ண மாட்டேன்.
ஆனால், விஜய் சாரே என்னிடம் வந்து பேசுவார். படப்பிடிப்பின் செட்டில் அவர் எல்லார்கிட்டேயும் அவர் பேசியதை விட என்னிடம் இன்னும் ஸ்பெஷலா பேசியிருக்காரு. நான் கில்லி படத்திற்கு முன்பே விஜய் சாருடன் “நேருக்கு நேர்” படத்தில் நடிச்சிருக்கேன். அடுத்தாக கில்லி படத்தில் நடிக்கும் போது விஜய் சார் எக்ஸ்ட்ராவாக பல விஷயங்கள் சொல்லி கொடுத்தார். அவரிடம் இருந்து பலவற்றை நான் கற்றுக்கொண்டேன் ” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…