Thiyagu - Vijayakanth [file image]
Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய நண்பரான தியாகு, திமுக ஆட்சி வந்ததும் விஜகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிந்த்ததும் அவரது மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து நினைவுபடுத்தினார்.
இது குறித்து அவர் பேசுகையில், “ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கலைஞருக்கு பொன்விழா எடுத்தோம்… அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தார். இந்த விழாவை எடுப்பதாக கூறிவிட்டு ஏவிஎம் சரவணன் போய்ட்டாரு. ஜெயலலிதா அம்மா கோவ பாடுவாங்க என்று கூறி பயந்துட்டாங்க.
அப்போ, ராம நாராயணன், அழகப்பன், சந்திர சேகர் அவர்களுடன் நானும் சென்றேன், விஜயகாந்திடம் நான் சொன்னேன். அவனும் ஒகே நம்ம நடத்துவோம் என்று சொன்னான். அப்போது, மனோரமா ஆச்சி எனக்கு போன் பண்ணுது, தம்பி அம்மா கொச்சிக்கும் தம்பி தேவை இல்லாமல் கொச்சிக்காதிங்க தம்பின்னு சொன்னுச்சி. விஜயகாந்த் கேக்கவே இல்லையே நான் நடத்திய தீருவேன் என்று சொன்னான்.
என்ன பிரச்சனை வந்தாலும் சரி நடத்துவோம் என்று கூறி, பொன் விழா நடத்தப்பட்டது. விஜயகாந்த் தரப்பில் 5 லட்சம் பேர் கூட்டினார். 10 லட்ச மதிப்பீட்டில் தங்க பேனாவை பரிசாக கொடுத்தார். கலைஞரை பீச் வர கூப்பிட்டு வந்து கோட்டையில் உக்கார வச்சி பாத்தாரு. அப்பேறு பட்ட மனுஷனின் மண்டபத்தை இடிக்கலாமா என்று உருக்கமாக கேட்டார் நடிகர் தியாகு.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…