இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படக்குழு ப்ரோமோஷன் வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையடித்து விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் குறித்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி , விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து பாடல்கள் மற்றும் டிரைலருக்காக காத்துள்ளனர்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…